/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 08, 2025 11:25 PM
அன்னூர்: தனித்துவ அடையாள அட்டை பெற, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழகத்தில் பி.எம். கிசான் நிதி திட்டம் 2019 பிப்., முதல் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு, வரும் காலங்களில் விவசாயிகள் உதவித்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் அவசியம் என, உறுதியாக தெரிவித்துள்ளது.
எனவே, தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள், உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வேளாண் அல்லது தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது பொது சேவை மையத்தில் ஆதார் எண், சிட்டா ஆகியவற்றோடு சென்று பதிவு செய்து அட்டை எண் பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

