/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய விழாவில் பங்கேற்க அழைப்பு
/
இலக்கிய விழாவில் பங்கேற்க அழைப்பு
ADDED : நவ 08, 2025 11:25 PM
கோவில்பாளையம்: கவையன் புத்தூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை சோதி மைய அறக்கட்டளை சார்பில், இலக்கிய விழா கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில், இன்று (9ம் தேதி) காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது.
டாக்டர் காந்தி தலைமை வகிக்கிறார். சமூக சேவகர் பாலதண்டாயுதம், 'ஆற்றின் அளவறிந்து கற்க' என்னும் தலைப்பில் பேசுகிறார்.
'வள்ளலார் உலகிற்கு செய்தது, சமய புரட்சியே, சமுதாயப் புரட்சியே' என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
'படித்ததில் பிடித்தது,' 'அறிவோம் ஒரு அரிய செய்தி' ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகின்றனர்.
ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சூரிய நாராயணன், சூர்யா, பாலுசாமி, சரவணகுமார், ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர் 'இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று, தமிழமுதம் பருக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

