/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சோலார் மின்வேலிகளில் மின்சாரம் செலுத்தாதீர்'
/
'சோலார் மின்வேலிகளில் மின்சாரம் செலுத்தாதீர்'
ADDED : நவ 08, 2025 11:24 PM
மேட்டுப்பாளையம்: தமிழ்நாடு மின்வாரிய விதிகள் 2023 ன் படி, சோலார் மின்வேலிகள் அமைத்தல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான சிறப்பு முகாம், சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையில், வனச்சரக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட பெத்திக்குட்டை, இரும்பொறை, சம்பரவல்லி, அம்மன்புதூர், பால்காரன் சாலை, லிங்காபுரம், வேடர் காலனி, ஊமபாளையம் ஓடந்துறை மற்றும் மொக்கை மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
ஏற்கனவே அமைத்துள்ள சோலார் மின்வேலிகளை பதிவு செய்தனர். புதிதாக சோலார் மின்வேலி அமைப்பதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றனர்.
'சோலார் மின்வேலிகளில் நேரடியாக மின்சாரம் செலுத்தக்கூடாது, வனவிலங்குகள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, விவசாயிகளை வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.----

