/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
/
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சக்கர நாற்காலி வழங்கல்
ADDED : நவ 08, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் சமூக சேவையின் ஒரு அங்கமாக, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் நான்கு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் நடந்த இதற்கான கூட்டத்தில் கனரா வங்கி ஊழியர் சங்க மாநில செயலாளர் கார்த்திக், துணை பொது மேலாளர் சைலஜா, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆர்.எம்.ஓ., மணிவண்ணன் ஆகியோர் பேசினர். கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திரமோகன், நவீன்குமார், ராம் நாராயணன், பாலசுப்ரமணியன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

