/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : நவ 08, 2025 11:23 PM
கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி நிறுவனர் பொங்கலுார் பழனிசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, முன்னணி ஐ.டி.நிறுவனமான மிஸ்டர் காப்பர் துணை தலைவர் மோகன்பாபு பேசுகையில், ''பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அனுபவ அறிவின் மூலம், தங்கள் துறையில் வல்லுனர்களாக மாணவர்கள் திகழ வேண்டும், '' என்றார்.
ஏ.ஐ.சி.டி.இ., இயக்குனர் சுனில் லுாத்ரா பேசுகையில், ''சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற உலகளாவிய பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில், பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும்,'' என்றார்.
பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. துறைகளைச் சேர்ந்த 677 மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லுாரியின் துணைத் தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன் தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

