/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து வாரமா சம்பளம் கிடைக்கல! 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
/
ஐந்து வாரமா சம்பளம் கிடைக்கல! 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
ஐந்து வாரமா சம்பளம் கிடைக்கல! 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
ஐந்து வாரமா சம்பளம் கிடைக்கல! 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஜன 03, 2025 10:47 PM
அன்னுார்; ஐந்து வாரங்களாக சம்பளம் வழங்கப்படாததால், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
அன்னுார் ஒன்றியத்தில், வடக்கலுார், பசூர், பொகலுார், கரியாம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் உள்ளிட்ட 21 ஊராட்சிகளில், தினமும், 1,000 முதல் 1,100 பேர் பணிபுரிகின்றனர்.
மரக்கன்றுகள் நடுதல், சாலை அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அரசு நிர்ணயித்த அளவு வேலை செய்தவர்களுக்கு தினசரி சம்பளமாக 319 ரூபாய் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஐந்து வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு வாரமும் செய்த பணிக்கு அதற்கு அடுத்த வாரம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஐந்து வாரங்கள் ஆகிவிட்டது. இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே அரசு நிர்ணயித்த 319 ரூபாய்க்கு பதில், 280 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்குகின்றனர். இந்நிலையில் ஐந்து வாரங்களாக அந்த சம்பளமும் வழங்கவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது.
எனவே விரைவில் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்,' என்றனர்.