தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு

  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு

  தேர்வுக்கு உதவ 'ஸ்கிரைப்' இல்லை : மாற்றுத்திறன் மாணவர்கள் தவிப்பு


ADDED : பிப் 11, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் என, பல்வேறு பிரிவுகளில் நுாற்றுக்கும் அதிகமான அரசு கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில், 179 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன.

உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு கல்லுாரிகளையே நாடுகின்றனர். குறிப்பாக, நடப்பு கல்வியாண்டில் சட்டக்கல்லுாரிகளில் மாற்றுத்திறன் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளின்போது, தேர்வு எழுத 'ஸ்கிரைப்' உதவியாளர்களை மாணவர்களே தேட வேண்டிய சூழல் நிலவுகிறது. இது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 'ஸ்கிரைப்' சம்பளத்தை மாணவர்களே முன்னின்று ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. சில அரசு கலை கல்லுாரிகளில், மாணவர்களும் அந்தந்தத் துறைகளும் இணைந்துசம்பளத்தை வழங்கிவிட்டு, பின் கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்கின்றனர். ஒரு நபருக்கு குறைந்தது, 200 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஆனால், சட்டக் கல்லூரிகளில் இத்தகைய நடைமுறை கூட பின்பற்றப்படுவதில்லை.

அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'சில கல்லூரிகளில் தன்னார்வலர்கள் வாயிலாக உதவியாளர்கள் கிடைக்கின்றனர். பல இடங்களில் அந்த வசதி இல்லை. மேலும், தேர்வு உதவியாளராக வருபவர், அதே பாடப்பிரிவை சார்ந்தவராக இருக்கக்கூடாது என்ற விதியும் மாணவர்களுக்கு சவாலாக உள்ளது' என்றார்.

மாணவர்கள் தரப்பில் கூறுகையில், 'வாட்ஸ்-அப் குழுக்கள் வாயிலாக, உதவியாளர்களை தேடுகிறோம். 'ஸ்கிரைப்' நியமிக்க கல்லுாரி நிர்வாகம் அல்லது அரசு தரப்பில் இருந்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us