sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கந்து வட்டி 'பந்தா' பார்ட்டிக்கு கோவில்ல: பதவி கூட்டணிக்கு போகுதாம் தி.மு.க., கோவை தொகுதி!

/

கந்து வட்டி 'பந்தா' பார்ட்டிக்கு கோவில்ல: பதவி கூட்டணிக்கு போகுதாம் தி.மு.க., கோவை தொகுதி!

கந்து வட்டி 'பந்தா' பார்ட்டிக்கு கோவில்ல: பதவி கூட்டணிக்கு போகுதாம் தி.மு.க., கோவை தொகுதி!

கந்து வட்டி 'பந்தா' பார்ட்டிக்கு கோவில்ல: பதவி கூட்டணிக்கு போகுதாம் தி.மு.க., கோவை தொகுதி!

1


UPDATED : ஜன 30, 2024 01:33 AM

ADDED : ஜன 30, 2024 12:28 AM

Google News

UPDATED : ஜன 30, 2024 01:33 AM ADDED : ஜன 30, 2024 12:28 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் மருத்துவமனையில் ஆபரேஷனுக்குச் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிக்கு, ரத்தம் கொடுப்பதற்காக, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் சித்ரா. வண்டியை எடுக்கும்போது, மின்னலாய் வந்து பக்கத்தில் வண்டியை நிறுத்தினாள் மித்ரா.

அவளைப் பார்த்த சித்ரா, ''வா வா...இன்னொரு யூனிட் ரத்தத்துக்கு ஆள் தேவைப்பட்டுச்சு. நீயா வாலன்டியரா வண்டியில வந்து ஏறிட்டேல்ல...உன்கிட்டயும் உறிஞ்சிர வேண்டியது தான்!'' என்று வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

அதற்கு மித்ரா சந்தோஷமாய், ''நான் ரெடிக்கா... போலாம் ரைட்!'' என்று வண்டியில் ஏறிக் கொண்டாள்.

அவிநாசி ரோட்டில் வண்டியை ஓட்டிக் கொண்டே, ''மித்து! நம்ம ஊருல டெங்கு, வைரஸ் காய்ச்சல் கேஸ் அதிகமாயிட்டே இருக்கு...ஹெல்த் டிபார்ட்மென்ட் ஆபீசர்களும், ஸ்பெஷல் கேம்ப் நடத்தி, பாதிப்பைக் குறைக்க முயற்சி பண்றாங்க...ஆனா ஊருக்குள்ள எங்க பார்த்தாலும் குப்பை குவிஞ்சு, சாக்கடை அடைச்சு, கொசு பேக்டரியா இருக்கு...அதுக்கு அவுங்க என்ன பண்ணுவாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.

அதற்கு, ''ஏன்க்கா...அவுங்களை யாரு குத்தம் சொன்னாங்க...!'' என்று மித்ரா கேள்வி கேட்க, ''நம்ம மாவட்டத்துல துறைக்குப் பொறுப்பா இருக்குற லேடி டாக்டர்தான்...டெங்கு அதிகமாகுறதுக்கு நீங்கதான் காரணம்னு சொல்லி, 10க்கும் மேற்பட்ட ஹெல்த் ஆபீசர்களுக்கு 17 'பி' மெமோ கொடுத்திருக்காங்க. அதுல மோதல் பெருசாகி, அந்தம்மாவுக்கு எதிரா ஆர்ப்பாட்டமே நடத்திட்டாங்க!'' என்றாள் சித்ரா.

மறுபடியும் குறுக்கிட்டு, ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா...

''அப்புறம் ?''

''கூப்பிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க...'மேல இருக்குற ஆபீசர் சொன்னதாலதான் மெமோ கொடுத்தேன்'னு அந்தம்மா சொல்லிருக்காங்க...அதைக்கேட்டுட்டு ரொம்ப கடுப்பாயிருக்காங்க. சங்கத்தைக் கூட்டி போராடலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்க... ஆனா, நடவடிக்கை எடுக்குறது தப்பான்னும் எதிர் விமர்சனம் எழுந்திருக்கிறாம்!''

சிறிது இடைவெளி விட்டு சித்ராவே தொடர்ந்தாள்...

''நீ சங்கம்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு...கோவையில கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர்கள் சங்கம், குவாரி சங்கம் ரெண்டையும் தன்னோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கிற எதிர்க்கட்சி 'மாஜி'யோட பினாமி ஒருத்தரு, அடிக்கடி ஆடியோ, வீடியோ வெளியிட்டு ஏதாவது ஒரு பரபரப்பு பண்ணிட்டே இருக்காருல்ல...!''

''ஆமாக்கா! குவாரிகள்ல நடக்குற கூத்து பத்தியும் லேட்டஸ்ட்டா ஒரு வீடியோ விட்ருந்தாரே....!''

''அவரே தான்...ரோடு வேலை சரியாப் பண்ணலைன்னா, விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் கேஸ் போட முடியும்னு சொல்லி, ரிட்டயர்டு ஆன டி.எஸ்.பி.,ஒருத்தரு, கான்ட்ராக்டர்களை பணம் கேட்டு மிரட்டுறாராம். அப்பிடிக் கேட்டா, யாரும் பணம் கொடுக்க வேண்டாம்; லீகலா பார்த்துக்குவோம்னு, அவரு புதுசா ஒரு ஆடியோ விட்ருக்காரு. கோவையில இன்னும் 'அதிமுக ஆட்சி'தான் நடக்குதுன்னு தெரியுதுல்ல!''

''இது தெரியாம, நம்ம கார்ப்பரேஷன் மேடமும், டெபுடியும் சென்னைக்குப் போயி, மினிஸ்டரைப் பார்க்கப் போனாங்களாம்...!''

''எதுக்குப் போனாங்களாம்?''

''அக்கா! கார்ப்பரேஷன்ல தி.மு.க., ஆதரவு, அ.தி.மு.க.,ஆதரவுன்னு கான்ட்ராக்டர்கள்ல ரெண்டு கோஷ்டி இருக்கு. இதுல தி.மு.க., ஆதரவு கான்ட்ராக்டர் ஒருத்தரு, ஒரு வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பிச்சு இருக்காரு. அவருக்கு ஆபீசர்களும் சப்போர்ட்டா இருக்காங்களாம். அதை உடைக்க, அ.தி.மு.க., ஆதரவு கான்ட்ராக்டர்கள், தாறுமாறா டெண்டர் போட்டாங்க. அதுல ஆபீசர்கள் கடுப்பாயிட்டாங்க!''

''அதனால...!''

''அ.தி.மு.க., கான்ட்ராக்டர்களை பிளாக் லிஸ்ட்டுல சேர்க்குறதுக்காகத்தான், மேடமும் டெபுடியும், சென்னை போயி, மீசைக்காரரைப் போய்ப் பார்த்து முறையிட்டாங்களாம். அவருக்கு, இங்க கட்சி இருக்குற நிலைமை தெரியும்ல...அதை வச்சு அவரோட ஸ்டைல்ல, 'காச் மூச்'ன்னு டோஸ் விட்டு அனுப்பிட்டாராம். அவுங்களுக்குத் தெரியாதுல்ல...அவரும், இங்க இருக்குற 'மாஜி'யும் எவ்ளோ நெருக்கம்னு!''

பேசிக்கொண்டிருந்த மித்ரா, கோவிலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அடுத்து சித்ரா ஆரம்பித்தாள்...

''மித்து! சுக்ரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழுவுல, நடமாடும் நகைக்கடையா வர்ற 'பந்தா' பார்ட்டியை, அறங்காவலரா நியமிச்சிருக்காங்க. இதுக்காக, ஆளும்கட்சி சீனியர் கவுன்சிலருக்கு, ஒரு பெரிய தொகை கொடுத்திருக்காராம். கந்து வட்டியில சம்பாதிச்சு, சோஷியல் கிளப்லயே இருக்கிறவருக்கு அறங்காவலர் பதவி... கொடுமை!''

''அக்கா! இதுவும் கோவில் மேட்டர் தான்...நம்ம மருதமலையில தைப்பூசத்தன்னிக்கு மூணு மடங்கு கூட்டம்... பாஸ் இருந்த வண்டிகளை மட்டும்தான் மேல விட்டாங்கல''.

''நானும் கேள்விப்பட்டேன்...ஆனா பாரஸ்ட் ஆளுகளோட சுத்துற என்.ஜி.ஓ., ஒருத்தரு, பாஸ் கேட்ருக்காரு. தரலை. தைப்பூசத்தன்னிக்கு கோவிலுக்கு வண்டியில வந்த அவரை, அடிவாரத்துல இருக்குற போலீஸ் நிறுத்திருக்காங்க...உடனே ஒரு பாரஸ்ட் கார்டை கூப்பிட்டு வந்து, 'இது எங்க பாரஸ்ட் இடம். எங்களுக்கே பாஸ் இல்லையா'ன்னு கேட்டு, அடிவார கேட்டை இழுத்து மூடிட்டாராம்!''

''அடேங்கப்பா! அப்புறம்...?''

''ரெண்டு தரப்புக்கும் சரியான 'ஆர்க்யூமென்ட்' நடந்திருக்கு...ஆனா வண்டியை விடலையாம். என்.ஜி.ஓ.,க்களுக்கு இவ்ளோ அதிகாரத்தை யாரு கொடுத்தாங்கன்னு தெரியலை...பாரஸ்ட் ஆளுங்க எதுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றாங்கன்னும் புரியலை!''

சித்ரா சொல்லி முடிக்கும் முன், குறுக்கே புகுந்தாள் மித்ரா...

''தைப்பூசம், குடியரசு தினம் ரெண்டு நாளும், டாஸ்மாக் கடைகளுக்கு லீவு விட்டாங்க. ஆனா மருதமலை ரோடு, தொண்டாமுத்துார் சுத்து வட்டாரத்துல அத்தனை பார்கள்லயும், சரக்கு ஆறா ஓடிருக்கு. தொண்டாமுத்தூர் குபேரபுரியில இருக்குற டாஸ்மாக் கடை, வீடுகளுக்குப் பக்கத்துல இருக்குறதால, அதை எடுக்கணும்னு ஏற்கனவே அந்த ஏரியா மக்கள் போராடிட்டு இருக்காங்க!''

''ஆமா! அதை எடுக்குறதா ஆபீசர்கள் சொன்னாங்களாமே...!''

''இப்போ வரைக்கும் எடுக்கலை...அந்தக் கடையிலயும் அன்னிக்கு 'சேல்ஸ்' பின்னி எடுத்திருக்கு. அதை சில லேடீஸ் சேர்ந்து வீடியோ எடுத்து, கன்ட்ரோல் ரூம்க்கு அனுப்பிட்டாங்க...ஆனா போலீஸ்காரங்க எட்டியே பார்க்கலையாம்.

பார் நடத்துறவுங்க, அந்த வீடியோ அனுப்புன லேடீஸ் வீட்டுக்கே போய் மிரட்டிருக்காங்க...அப்புறம்தான் பெண்கள் எல்லாம் சேர்ந்து பாரை முற்றுகையிட்ருக்காங்க!''

''சூப்பர்...!''

''அப்புறமென்ன...வழக்கம் போல 10 பாட்டில்களை வச்சு, பேருக்கு ஒரு கேசைப் போட்டுட்டாங்க!''

''மித்து! நம்ம ஊர்ல குடிக்கிறவுங்களுக்கு சரக்குக்குப் பஞ்சமில்லை...ஆனா படிக்கிற பசங்களுக்கு தான், குடிக்கிறதுக்கு தண்ணி கூட கிடைக்கிறதில்லை...மேட்டுப்பாளையத்துல, 2016ல கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் திறந்தாங்க... ஏழு வருஷமாயும் இப்போ வரைக்கும் குடி தண்ணி வசதி கிடையாது. கேட்டா, குடிநீர் இணைப்பு தரலைங்கிறாங்க...இதான் இந்த கவர்ன்மென்டோட இளைஞன் நலன் போலிருக்கு!''

''இளைஞர் நலன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு...சேலம் இளைஞரணி மாநாட்டுக்குப் போகாம, தாய்லாந்து டூருக்குப் போன உடன்பிறப்பு ஒருத்தரைப் பத்திப் பேசுனோமே...!''

''ஓ...அந்த பகுதிக்கழகச் செயலாளர் தானே!''

''அவரே தான்க்கா...நண்பர்களோட தாய்லாந்து டூர் போக ஆறு மாசத்துக்கு முன்னாடியே டிக்கெட் 'புக்' பண்ணீட்டாராம். மழையினால மாநாடு ரெண்டு தடவை தள்ளிப்போயி, கடைசியில இவர் 'புக்' பண்ணுன தேதியில வந்திருச்சாம்.

டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாம, டூர் போனாராம். ஆனா அதுக்கு முன்னாடி, தொண்டர்களை திரட்டி, பஸ்கள்ல சேலத்துக்குப் போக ஏற்பாடு செஞ்சிட்டுதான் போனாராம்!''

''கோவை தி.மு.க.,மாதிரி கோஷ்டிகளை வேற எங்கேயுமே பார்க்க முடியாதுக்கா...என்ன பண்ணுனாலும் கட்சியை வளர்க்க முடியலைன்னுதான், எலக்சனுக்காக உதயநிதியை மேற்கு மண்டல பொறுப்பாளராப் போட்ருக்காங்க...ரெண்டு நாளைக்கு முன்னால, கோவையில இருக்குற கட்சி நிர்வாகிகளை, சென்னைக்குக் கூப்பிட்டு, தனித்தனியா விசாரிச்சிருக்காங்க!''

''இல்லையேப்பா....நான் கேள்விப்பட்ட தகவல் வேற...கட்சி நிர்வாகிகளைப் பத்தி, உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டை வச்சு, மார்க் போட்டாங்களாமே!''

''ஆமாக்கா....உதயநிதி, நேரு, தங்கம் தென்னரசு உட்பட அஞ்சு பேர் கொண்ட குழு, தனித்தனியா கூப்பிட்டுப் பேசி, ஆரஞ்சு, பச்சைன்னு ரெண்டு விதமா மதிப்பீடு பண்ணுனாங்களாம். பல பேருக்கு சரியான 'டோஸ்' விழுந்துச்சாம். பல நிர்வாகிகள், கோவையில தி.மு.க., சார்புல யாரையும் நிறுத்த வேண்டாம்னு சொல்லீட்டாங்களாம்!''

''யாரை நிறுத்தணுமாம்...?''

''கமலைத் தவிர, யாரு நின்னாலும் சிக்கல்னு சொல்லிருக்காங்க...அவர் வரலைன்னா, தொகுதியை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிருவாங்க போலிருக்கு!''

மித்ரா சொல்லி முடிக்கவும், மருத்துவமனைக்குள் வண்டி நுழையவும் சரியாய் இருந்தது. இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, ரத்தவங்கியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.






      Dinamalar
      Follow us