/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புகையிலை வேண்டாம் உயிர் வேண்டும்' நிகழ்ச்சி
/
'புகையிலை வேண்டாம் உயிர் வேண்டும்' நிகழ்ச்சி
ADDED : ஆக 12, 2025 09:15 PM
கோவை, ;இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் பயோ சயின்ஸ் துறைகள், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணைந்து, 'புகையிலை வேண்டாம்; உயிர் வேண்டும்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று, புகையிலை இல்லாத வாழ்க்கை சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசினார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, புகையிலை பயன்பாட்டை குறைப்பதில் இளைஞர்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'புகையிலை வேண்டாம், உயிர் வேண்டும்' என்ற வெஜிடபிள் கார்விங், வீடியோ ரீல்ஸ், மற்றும் புகைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, இந்துஸ்தான் கல்லூரி நிர்வாக அதிகாரி சிவசங்கர் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.