வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: தயார் நிலையில் அதிகாரிகள்
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: தயார் நிலையில் அதிகாரிகள்
ADDED : மார் 29, 2026 09:20 PM

சூலூர்: சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச்30 ல் துவங்குகிறது. சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல் ஏப். 23 ம்தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி, 4 ம்தேதி வரை நடக்க உள்ளது. வேட்பு மனுத்தாக்கலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
சூலூர் சட்டசபை தொகுதிக்கான மனுத்தாக்கல், சூலூர் தாலுகா அலுவலகத்தில் நடக்க உள்ளது. அதற்காக, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மனுத்தாக்கலுக்கு வரும் வேட்பாளர்களை கண்காணிக்கும் வகையில், சி.சி.டி.வி., காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும், 100 மீ., எல்லை வரையறுக்கப்பட்டு, மார்க் செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகளை பதிவு செய்ய வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,' காலை, 11:00 மணியில் இருந்து, 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.
வேட்பாளர்களுடன் மூன்று வாகனங்கள், 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். மனுத்தாக்கல் செய்பவருடன், நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,' என்றனர்.
