/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் கோயில் குத்தகை நிலங்களுக்கு தீர்வு கட்சி சார்பற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஜன 01, 2026 05:16 AM
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குத்தகை நிலங்கள் தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி, தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த மனு:
பேரூர் திருக்கோயில் விவசாய நிலங்களில் ஒரு பகுதி, சில விவசாயிகளுக்கு கோயில் ஏலம் மூலம்,1968ல் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் நிரந்தரம் செய்யப்பட்டதால், அதன் பின் நாள்தோறும் வருவாய் நீதிமன்றம் நிர்ணயித்த குத்தகையை கோயிலுக்கு செலுத்தி விவசாயம் செய்து வந்தனர்.
குத்தகை செலுத்த தவறும் விவசாயிகள் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, திருக்கோயில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
இதனால் குத்தகை விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும்.
திருக்கோயிலும் நியாயமான குத்தகையை பெற முடியும். அதை தவிர்த்து அறநிலையத்துறை சட்டத்தின் பெயரில் குத்தகை விவசாயிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தினோம்.
கோர்ட் உத்தரவை காண்பித்து, வாதாடியும் போராடியும் வருகிறது.
பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும், பொது அறக்கட்டளை சட்டத்தின் மூலம் வரன்முறை செய்ய, தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கந்தசாமி கூறியிருந்தார்.