/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிற்காமல் செல்லும் அரசு பஸ் பொதுமக்கள் அவதியோ அவதி
/
நிற்காமல் செல்லும் அரசு பஸ் பொதுமக்கள் அவதியோ அவதி
நிற்காமல் செல்லும் அரசு பஸ் பொதுமக்கள் அவதியோ அவதி
நிற்காமல் செல்லும் அரசு பஸ் பொதுமக்கள் அவதியோ அவதி
ADDED : ஜன 24, 2024 09:21 PM
கிணத்துக்கடவு, -கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில், அரசு டவுன் பஸ் நிற்காததால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு - பொள்ளாச்சி வழித்தடத்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில், கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் சர்வீஸ் ரோட்டில் ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வேளாண் அலுவலகம் போன்ற அரசு வளாகங்கள் உள்ளன.
இந்த வளாகத்தின் அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த வழித்தடம் சர்வீஸ் ரோடாக மாற்றம் செய்யப்பட்ட பின், இந்த இடத்தில் ஒரு சில அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றி, இறக்க நிற்பதில்லை.
இதனால், அரசு அலுவலகம் வரும் பொதுமக்கள் பெரும்பாலானோர், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தாலுகா அலுவலகம் வரை நடந்து செல்கின்றனர். இந்த வழியில் பொதுமக்கள் நடக்க நடைபாதை உள்ளது. இதில், அதிகளவு புதர் சூழ்ந்துள்ளது.
இங்கு பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் தொல்லை இருப்பதால் நடைபாதையை தவிர்த்து, மக்கள் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றனர். இதை தவிர்க்க, அரசு பஸ்களை முறையாக நிறுத்தி இறக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.