/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமை அஞ்சலகத்தில் பரிவர்த்தனை இல்லா நாள்
/
தலைமை அஞ்சலகத்தில் பரிவர்த்தனை இல்லா நாள்
ADDED : ஜூலை 16, 2025 11:07 PM
கோவை; கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களில், வரும் 21ம் தேதி 'பரிவர்த்தனை இல்லா நாளாக' அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறையின் மென்பொருள், வரும் 22ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயர்த்தப்பட்ட மென்பொருளில், 'க்யூஆர்' வாயிலாக பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்த இருக்கிறது.
புதிய மென்பொருள் பயன்பாடு எவ்வித சிரமும் இன்றி செயல்படுத்த, வரும் 21ம் தேதி 'பரிவர்த்தனை இல்லா நாளாக' அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் திங்கட்கிழமை, கூட்ஷெட் ரோட்டில் உள்ள கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களிலும், அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற இயலாது.
பதிவுத் தபால், விரைவுத் தபால், பார்சல் அனுப்புவது போன்ற சேவைகளும், அன்று பெற இயலாது. ஆனால், ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் துணை, கிளை அஞ்சலகங்கள் வாயிலாக, வரும் திங்கட்கிழமையன்று, பொதுமக்கள் அஞ்சலக சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அன்று, ஆதார் சேவைகள், அனுமதிக்கப்பட்ட அனைத்து அஞ்சலகங்களில் வழக்கம் போல் செயல்படும் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.