sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாலக்காட்டில் இயல்பு நிலை பாதிப்பு

/

 பாலக்காட்டில் இயல்பு நிலை பாதிப்பு

 பாலக்காட்டில் இயல்பு நிலை பாதிப்பு

 பாலக்காட்டில் இயல்பு நிலை பாதிப்பு


ADDED : பிப் 13, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: மத்திய அரசை கண்டித்து, 13 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால், பாலக்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., -ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., உட்பட, 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், பாலக்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.

வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள், குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. ஆசிரியர் சங்கங்கள் போன்றவை, வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை.

பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வளாகங்கள் மூடப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்த அளவு எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் சென்றனர்.






      Dinamalar
      Follow us