வட கோவை ரயில் நிலைய மேம்பாடு ரயில் சேவைகளில் மாற்றம்
வட கோவை ரயில் நிலைய மேம்பாடு ரயில் சேவைகளில் மாற்றம்
ADDED : மார் 25, 2026 07:28 AM
கோவை: வட கோவை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: போத்தனூரில் இருந்து காலை 9:40க்கு மேட்டுப்பாளையம் புறப்படும் மெமு ரயில் வரும் 28, 29 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10:55க்கு கோவை புறப்படும் மெமு ரயில் வரும் 28,29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
கோவையில் இருந்து காலை 11:50க்கு புறப்படும் மேட்டுப்பாளையம் மெமு ரயில், இன்றும், 28, 29ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1:05 மணிக்கு போத்தனூர் புறப்படும் மெமு ரயில், இன்றும் 28, 29ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
போத்தனூரில் இருந்து மாலை 3:30 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்படும் மெமு ரயில், 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4:45க்கு கோவை புறப்படும் மெமு ரயில், 29ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 6:55க்கு போத்தனூர் புறப்படும் மெமு ரயில், 27, 28,29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
போத்தனூரில் இருந்து இரவு 8:15 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்படும் மெமு ரயில் 27,28,29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
புறப்படும் இடம் மாற்றம்: கோவை - சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244), இன்றும் 29ம் தேதியும் கோவைக்குப் பதிலாக போத்தனூரில் இருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும்.
கோவை - சென்னை சென்ட்ரல்(12676) எக்ஸ்பிரஸ், இன்றும், 29ம் தேதியும் போத்தனூரில் இருந்து மாலை 3:15 மணிக்கு புறப்படும்.
கோவை - ஹஸ்ரத் நிஜாமுதீன்(12647) கொங்கு எக்ஸ்பிரஸ், வரும் 29ம் தேதி போத்தனூரில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும்.
இந்த மூன்று ரயில்களும் இருகூர் வழியாக இயக்கப்படும்.
மாற்றுப்பாதையில் இயக்கம்: திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் 26, 27, 29ம் தேதிகளில், இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
டில்லி - திருவனந்தபுரம்(12626) கேரளா எக்ஸ்பிரஸ், வரும், 27ம் தேதி இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - கோவை(12675) எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை(12243) எக்ஸ்பிரஸ், ஆலப்புழா - தன்பாத்(13352), திருநெல்வேலி - பிலாஸ்பூர்(22620), திருவனந்தபுரம் வடக்கு - கோராக்பூர்(12512), திருவனந்தபுரம் சென்ட்ரல் - செகந்திராபாத்(20630), மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர்(16160), ஆகிய ரயில்கள் வரும், 29ம் தேதி இருகூர் - போத்தனுார் வழியாக இயக்கப்படும்.
