/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும்
/
வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும்
ADDED : அக் 16, 2025 08:40 PM
பொள்ளாச்சி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சராசரியை விட 9 சதவீதம் கூடுதலாக 370 மி.மீ., வரை மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை, தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ., அளவுக்கு பெய்யும். இந்த ஆண்டு கூடுதலாக 50 செ.மீ., வரை மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், மலைப் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் சராசரி மழைப்பொழிவு 338 மி.மீ., ஆகும். நடப்பாண்டில், இது 370 மி.மீ., ஆக, 9 சதவீதம் வரை கூடுதலாக பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோவை வேளாண் பல்கலையில் உள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, கோவையில் கூடுதல் மழையும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சதவீதம் கூடுதல் மழையும், நீலகிரி மாவட்டத்தில் சராசரியை ஒட்டியும் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை பொழிவுக்கு ஏற்ப, விவசாய பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.