/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் 'குரங்கு பெடல்' படம் திரையிடல் துவக்கம்
/
பள்ளிகளில் 'குரங்கு பெடல்' படம் திரையிடல் துவக்கம்
பள்ளிகளில் 'குரங்கு பெடல்' படம் திரையிடல் துவக்கம்
பள்ளிகளில் 'குரங்கு பெடல்' படம் திரையிடல் துவக்கம்
ADDED : அக் 16, 2025 08:40 PM
பொள்ளாச்சி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இம்மாதத்துக்கான திரையிடல் திட்டத்தில், குழந்தைகளுக்கான 'குரங்கு பெடல்' திரைப்படம் திரையிடப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில், திரையிடல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ், பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றை விமர்சன ரீதியாக அணுகுவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், இம்மாதம் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கிய, 'குரங்குபெடல்' திரைப்படம், நேற்று முன்தினம் முதல் திரையிடப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், இம்மாத இறுதிக்குள் இத்திரைப்படம், மாணவர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது.
இயக்குனர் கமலக்கண்ணன் கூறுகையில், ''குழந்தைகளுக்கான திரைப்படம் தான் 'குரங்கு பெடல்'. நல்ல சினிமாவை நோக்கி, குழந்தைகள் தங்களை ஆட்படுத்திக் கொள்ள, இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்,'' என்றார்.
ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட இயக்குனர் கமலக்கண்ணன், கோவையில் கல்லுாரி படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.