/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் பயணியிடம் கைவரிசை; வடமாநில வாலிபர் கைது
/
ரயில் பயணியிடம் கைவரிசை; வடமாநில வாலிபர் கைது
ADDED : ஜன 24, 2025 12:17 AM

கோவை; ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய வடமாநில வாலிபரை கோவை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர் சத்யபாமா, 76. இவர் தனது கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்னை - ஆலப்புழா வரை செல்லும் ரயிலில் எஸ் 11 பெட்டியில் பயணம் செய்தார்.
சத்யபாமா தனது ஹேண்ட் பேக்கை இருக்கையில் வைத்து அதன் அருகில் படுத்திருந்தார். இந்நிலையில் ரயில் திருப்பூர் அருகில் வந்த போது, தனது ஹேண்ட் பேக்கை பார்த்தபோது, அது அங்கு இல்லை. இதனால் அவர் கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், அதில் தங்க மோதிரம், ரூ. 12 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவை இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனிடையில் கோவை ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் வசாரித்தனர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தபலேஸ்வர், 19 என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் போலீசார் சோதனை நடத்தியதில் சத்யபாமாவின் ஹேண்ட் பேக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து ஹேண்ட் பேக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், தபலேஸ்வர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.