/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வடமாநில தொழிலாளிக்கு சமூக பாதுகாப்பு இல்லை'
/
'வடமாநில தொழிலாளிக்கு சமூக பாதுகாப்பு இல்லை'
ADDED : ஆக 26, 2025 10:49 PM

கோவை; கோவை மாவட்ட ஏ.ஐ. டி.யு.சி., இன்ஜினியரிங் பொது தொழிலாளர் சங்கம் சார்பில், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு பேரவை கூட்டம், காட்டூர் சங்க அலுவலகத்தில் நடந்தது. வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
உற்பத்தி துறை, சேவை துறை, கட்டுமான துறைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். பணி பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு இல்லை. நிரந்தர பணி ஒப்பந்த பணியாக மாற்றப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவைக்கு வந்து பணிபுரிகின்றனர். விடுப்பு வசதி, மருத்துவ வசதி ஏதுமில்லை.
இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட சமூக பாதுகாப்பு, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இல்லை. வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழக இளைஞர்களுக்கு வேலை பாதிப்பதாக, பொய் பிரசாரம் செய்யப்படுகிறது; உண்மை அதுவல்ல.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட பொது செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சில் செயலாளர் தங்கவேல், பொருளாளர் சுப்ரமணியன், ராஜன், பாஷா, ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.