/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் ஒருவர் கூட விடுபடக்கூடாது: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
/
வாக்காளர் ஒருவர் கூட விடுபடக்கூடாது: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
வாக்காளர் ஒருவர் கூட விடுபடக்கூடாது: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
வாக்காளர் ஒருவர் கூட விடுபடக்கூடாது: கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : நவ 10, 2025 11:47 PM
- நமது நிருபர் -: தகுதியான வாக்காளர் ஒருவர் கூட, வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் பாதுகாக்கவும், அனைவருக்கும் ஓட்டுரிமை கிடைக்கச் செய்யவும், கோவை மாவட்ட நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.
கோவையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முறை பணியில், தன்னார்வலர்கள் உட்பட, 11 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், தன்னார்வலர்கள் வீடுதோறும் வாக்காளர் படிவங்களை வழங்கி வருகின்றனர்.
படிவம் வழங்கும் போது, ஏற்கனவே அந்த வீட்டில் குடியிருந்து மாறி சென்றவர்கள், ஊர், தெரு, மாவட்டம், தொகுதி மாறியவர்கள், அருகருகே வசிப்போர், ஒரே தொகுதி, ஒரே வார்டு, வாக்காளர் பட்டியலில் பகுதி, பாகம் எண் வேறு வேறாக இருப்பவர்கள் அனைவரும், தேர்தலில் தவறாமல் ஓட்டு போட, மாவட்ட நிர்வாகம் வசதிகளை செய்து வருகிறது.
முகவரி மாறியவர்கள், பிரச்னைக்குரியவர்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரை சந்தித்து, ஏற்கனவே குடியிருந்ததை உறுதிப்படுத்தி, தற்போது உள்ள முகவரிக்கு குடிபெயர்ந்ததை சொல்லி படிவங்களை பெறலாம்.
புதிய முகவரியை 'ஆன்லைன்' முறையில், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய, தேசிய வாக்காளர் சேவைக்கான போர்ட்டல் (NVSP) வழியாக, படிவம் 8 ஐ பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பணி நிமித்தமாக வெளியூரில் வசிக்கும், சொந்த ஊர்க்காரர்கள், தங்கள் ஏரியாவுக்கு செல்லும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரின் போன் எண் விவரங்களை, https://erolls.tn.gov.in/blo/ என்ற முகவரியில் அறிந்து, அவரிடம் விவரங்களை தெரிவிக்கலாம்.
சொந்த ஊரில் ஓட்டுக்களை செலுத்துபவர்கள், படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது, voter.eci.gov.in என்ற முகவரிக்கு சென்று, ஆன்லைனில் வாக்காளர் படிவங்களை, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம், என, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

