/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணம் எடுக்க மட்டுமல்ல ஏ.டி.எம். கார்டு விபத்து காப்பீடு வசதியும் அதிலே இருக்கு
/
பணம் எடுக்க மட்டுமல்ல ஏ.டி.எம். கார்டு விபத்து காப்பீடு வசதியும் அதிலே இருக்கு
பணம் எடுக்க மட்டுமல்ல ஏ.டி.எம். கார்டு விபத்து காப்பீடு வசதியும் அதிலே இருக்கு
பணம் எடுக்க மட்டுமல்ல ஏ.டி.எம். கார்டு விபத்து காப்பீடு வசதியும் அதிலே இருக்கு
ADDED : ஆக 09, 2025 11:41 PM
ஒவ்வொரு வங்கிக்கும், வாடிக்கையாளர்களின் விபரம் அடங்கிய ஒரு 'சர்வர்' உண்டு. அப்படியான அனைத்து வங்கிகளின் சர்வர்களையும், ஒருங்கிணைக்க கூடிய நிறுவனங்கள் தான், விசா, மாஸ்டர், ரூபே ஆகிய நிறுவனங்கள்.
இந்த நிறுவனங்களால், வங்கி பயனர்களின் தரவுகளை கையாள முடியும். இதை வைத்து தான், நமது ஏ.டி.எம்., கார்டுகளை, எந்த வங்கி ஏ.டி.எம்.,களில் செலுத்தினாலும் பணம் எடுக்க முடிகிறது.
அதிலும், கிளாசிக், கோல்டு, பிளாட்டினம் என வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை பிடித்தம் செய்யப்படும் ஏ.டி.எம்., கார்டு பராமரிப்பு தொகை, கிளாசிக், கோல்டு, பிளாட்டினம் வகை கார்டுகளுக்கு, அந்தந்த வங்கிகளை பொறுத்து மாறும்.
இந்த டெபிட் கார்டுகளில், விபத்து காப்பீடு வசதியும் இருக்கிறது. கார்டுகளின் வகைக்கு ஏற்ப, ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, விபத்து காப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்கிறார், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஈஸ்வர மூர்த்தி.
அவர் கூறியதாவது:
டெபிட் கார்டுகளின் மிகப்பெரிய சிறப்பம்சம், அதில் உள்ள விபத்து காப்பீடு. இதில், விபத்து எனப்படுவது, வாகன விபத்து மட்டுமின்றி, வன விலங்குகள் தாக்குதல், மின் சாதன தாக்குதல் போன்ற இயற்கை மரணம் அல்லாத வகைகளுக்கும் பொருந்தும்.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பதன் வாயிலாக, உரிமை கோர முடியும். ஒவ்வொரு வங்கியும் பல்வேறு பிரிவுகளில், சேமிப்பு கணக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், PMJDY எனப்படும் ஜன்தன் கணக்கு, ராணுவ வீரர் சேமிப்பு கணக்கு, மத்திய, மாநில அரசு ஊழியர் கணக்கு மற்றும் பொது மக்களுக்கான சாதாரண சேமிப்பு கணக்கு போன்ற அனைத்துக்கும், இந்த விபத்து காப்பீடு பொருந்தும்.
இதுபோன்ற டெபிட் கார்டு வாயிலாக பெறும் விபத்து காப்பீடு அல்லாது, வருட பிரீமிய தொகையான ரூ.20 மற்றும் ரூ.436 வாயிலாக, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) போன்ற விபத்து மற்றும் இயற்கை மரண காப்பீடும் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஒவ்வொரு வங்கியிலும், ஒவ்வொரு விதமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. வங்கியில் ஏ.டி.எம்., கார்டு பெறும் போது, வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் விபரமாக இது குறித்து சொல்வார்கள்.