தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அது மட்டுமல்ல; அதுக்கும் மேல! திட்டங்களை பட்டியலிடும் வேலுமணி

 அது மட்டுமல்ல; அதுக்கும் மேல! திட்டங்களை பட்டியலிடும் வேலுமணி

 அது மட்டுமல்ல; அதுக்கும் மேல! திட்டங்களை பட்டியலிடும் வேலுமணி


ADDED : ஏப் 13, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தொண்டாமுத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, சுண்டாக்காமுத்துார், ராமசெட்டிபாளையம், கோவைபுதுார், அறிவொளி நகர், குளத்துபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்க்கொண்டார். அவரது பிரசார வாகனங்களுக்கு முன்னும், பின்னும் 100 க்கும் மேற்பட்ட பைக்குகளில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பின் தொடர்ந்து சென்றனர். அனைத்து இடங்களிலும் பட்டாசு சத்தத்திற்கும் பஞ்சமில்லை.

பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:

தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதி முழுவதும் எனது தந்தை காலத்தில் இருந்து பழகி வருகிறேன். 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களை குறுகிய காலத்தில் செய்து கொடுத்துள்ளேன். தி.மு.க., வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். இத்தொகுதி முழுவதும் உள்ள மக்கள் என்னை அறிவார்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியில் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

வேலுமணி ஒவ்வொரு ஸ்பாட்டிலும் பேசும் போது, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து வருகிறார். ஒவ்வொரு திட்டத்தையும் பேசி முடித்து, அடுத்த திட்டம் பற்றி பேசுவதற்கு முன், அது மட்டுமல்ல... என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். ஒவ்வொரு பிரசார இடத்திலும், அவர் பேசும், அது மட்டுமல்ல, என்ற வார்த்தை ஹைலட்டாக இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us