sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இழப்பதற்கு ஒன்றுமில்லை! ஒவ்வொன்றாக பறிபோகும் உரிமைகள்; பொள்ளாச்சியை கோட்டம் மாற்றணும்

/

இழப்பதற்கு ஒன்றுமில்லை! ஒவ்வொன்றாக பறிபோகும் உரிமைகள்; பொள்ளாச்சியை கோட்டம் மாற்றணும்

இழப்பதற்கு ஒன்றுமில்லை! ஒவ்வொன்றாக பறிபோகும் உரிமைகள்; பொள்ளாச்சியை கோட்டம் மாற்றணும்

இழப்பதற்கு ஒன்றுமில்லை! ஒவ்வொன்றாக பறிபோகும் உரிமைகள்; பொள்ளாச்சியை கோட்டம் மாற்றணும்


ADDED : அக் 03, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்த இரண்டு 'கவுன்டர்'களில், ஒன்றை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடியுள்ளது. இதற்கு பயணியர் நலச்சங்கம், அரசியல், சமூக இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மூன்று 'கவுன்டர்'கள் செயல்பட்டன. அதில், முன்பதிவில்லா, முன்பதிவு மற்றும் ரயில்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள விசாரணை என மூன்று 'கவுன்டர்'கள் இருந்தன.

அங்கு பணியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பின்னர், சப்தமின்றி 'கவுன்டர்' மூடப்பட்டது.

முன்பதிவு கவுன்டரில், காலை, 7:30 மணிக்கு தட்கலில் விண்ணப்பிப்போருக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டன.

மீண்டும் காலை, 10:00 மணிக்கு, 'ஏசி' பெட்டியில் பயணிக்கும் பயணியருக்கு தட்கல் முன்பதிவு துவங்கப்பட்டன. அதன்பின், காலை, 10:15 மணிக்கு மீண்டும் மற்ற முன்பதிவுகள்; காலை, 11:00 மணிக்கு படுக்கை வசதி பெட்டிக்கான தட்கல் முன்பதிவு துவங்கி, 15 நிமிடங்களில் முடிவடைந்து விடும். வழக்கம் போல முன்பதிவுக்கான டிக்கெட்கள், மதியம், 2:00 மணி வரை வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி வழியாக செல்லும் ரயில்களுக்கு முன்பதிவில்லா கவுன்டரில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பிளாட்பார்ம், சரக்கு டிக்கெட், பார்சல் டிக்கெட்களும் இங்கு வழங்கப்பட்டது. இரண்டு கவுன்டரிலேயே விசாரணை தகவல்களையும் பயணியர் கேட்டறிந்தனர்.

முன்னறிவிப்பின்றி மூடல்


முன்பதிவு கவுன்டர் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. அனைத்து விதமான டிக்கெட்டுகள் பதிவு என அனைத்தும், ஒரு கவுன்டரிலேயே மேற்கொண்டதால் பயணியர் அதிருப்தி அடைந்தனர்.

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தின் அவசர கூட்டம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

முன்னறிவிப்பின்றி திடீரென முன்பதிவு கவுன்டரை மூடி, அனைத்து பணிகளும் ஒரே கவுன்டரில் மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே வாரியம் அனுமதித்துள்ள ரயில்களை பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என, வலியுறுத்தப்பட்டது.

போராட முடிவு


பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், முன் இருந்ததை போன்று, இரண்டு டிக்கெட் 'கவுன்டர்'களும் செயல்பட வேண்டும்.

இல்லையெனில் அனைத்து அரசியல் சமூக இயக்கங்கள் இணைந்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகத்தை கண்டித்து, ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்தப்படும் என, அரசியல் சமூக இயக்கங்கள் அறிவித்துள்ளன.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் இருந்து மீட்டு, சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இனியும் மவுனம் காக்காமல், உரிமையை பெற முயற்சிக்க வேண்டும். தி.மு.க.,வை சேர்ந்தவர்களே எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பகுதி மக்களின் கோரிக்கையை, ரயில்வே அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.

'கவுன்டர்' திறக்கணும்!

விகாஸ், செயற்குழு உறுப்பினர், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கம்:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இரு கவுன்டர்கள் இருந்த போதே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாது.தற்போது, ஒரு கவுன்டர் உள்ள சூழலில் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதுடன், பயணியர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும், முன்பதிவில்லா டிக்கெட் இயந்திரம் ஒப்பந்தத்தில் விடப்பட்டுள்ளது. அவ்வப்போது வேலை செய்யாவிட்டால் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகளின் தனிச்சையான முடிவு அதிருப்தியை அளிக்கிறது. மேலும், ரயில் டிக்கெட் பதிவு செய்யும் இடம் கூட தெரியாத நிலையே உள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற்று கவுன்டர் திறக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us