/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பு பலகை மறைப்பு வாகன ஓட்டுநர்கள் அவதி
/
அறிவிப்பு பலகை மறைப்பு வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஏப் 10, 2025 10:05 PM

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெளியூர்களில் இருந்து வரும் பயணியர் வசதிக்காக, ஆங்காங்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊர் பெயர், கி.மீ., அடங்கிய அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், நகரில் உள்ள ரவுண்டானா பகுதிகளில், பொள்ளாச்சி, பழநி, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழித்தடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைககள் வைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகையையொட்டி, 'சிக்னல்' கம்பம் வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் விழிப்புணர்வு விளம்பர போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால், ஊர் பெயருடன் கூடிய அறிவிப்பு பலகை மறைத்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வெளியூர்களில் இருந்து வரும் பயணியர், வழித்தடம் தெரியாமல் அலையும் நிலை ஏற்படுகிறது. மேலும், இந்த விளம்பர போர்டுகள் காற்று வேகமாக அடிக்கும் போது, ஆடுவதால் கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து அறிவிப்பு பலகை தெரியும் வகையில், மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.