/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இருந்து வெளியேற 83 ரவுடிகளுக்கு நோட்டீஸ்
/
மாநகரில் இருந்து வெளியேற 83 ரவுடிகளுக்கு நோட்டீஸ்
ADDED : பிப் 09, 2025 12:30 AM
கோவை: தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும், 83 நபர்களை மாநகரில் இருந்து வெளியேற போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
கோவை, மாநகர பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் சில நபர்கள் மீது உள்ள அச்சத்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளிக்க வராமல் உள்ளனர். மேலும் சிலர், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வர தயங்குவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது.
இது போன்ற ரவுடிகள் குறித்து போலீசார் தகவல் சேகரித்தனர். அதன்படி, முதற்கட்டமாக 27 பேரை வெளியேற்ற கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ச்சியாக, மேலும், 83 ரவுடிகளை மாநகரில் இருந்து வெளியேற, நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கமிஷனரின் உத்தரவை மீறும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், போலீசார் எச்சரித்துள்ளனர்.