/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்முறையீட்டு பத்திரங்களுக்கு மதிப்பு; நிர்ணயிக்க வழிமுறைகள் அறிவிப்பு
/
மேல்முறையீட்டு பத்திரங்களுக்கு மதிப்பு; நிர்ணயிக்க வழிமுறைகள் அறிவிப்பு
மேல்முறையீட்டு பத்திரங்களுக்கு மதிப்பு; நிர்ணயிக்க வழிமுறைகள் அறிவிப்பு
மேல்முறையீட்டு பத்திரங்களுக்கு மதிப்பு; நிர்ணயிக்க வழிமுறைகள் அறிவிப்பு
ADDED : ஆக 06, 2025 10:53 AM
சென்னை: 'குறைவான மதிப்பில் தாக்கலாகும் பத்திரங்களுக்கு, மேல் முறையீட்டில் நிர்ணயிக்கப்படும் புதிய மதிப்பானது, வழிகாட்டி மதிப்பை விட, கூடுதலாக இருக்கக் கூடாது' என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழகத்தில் சொத்து விற்பனை தொடர்பாக, சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரங்களை மக்கள் தாக்கல் செய்கின்றனர். இதில், குறிப்பிடப்படும் மதிப்பானது, வழிகாட்டி மதிப்புக்கு இணையாக அல்லது அதிகமாக இருக்கலாம்.
சில இடங்களில் வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்பில் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகின்றன. இத்தகைய பத்திரங்களை பதிவு செய்யாமல், அதை உதவி கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிக்கு, மேல் முறையீடாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு பத்திரங்களை மேல் முறையீட்டுக்கு அனுப்பும் போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அடிப்படையிலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது, குறைந்த மதிப்பு பத்திரங்களுக்கு, உத்தேச புதிய மதிப்பாக குறிப்பிடப்படும் தொகையானது, அந்த சொத்துக்கான வழிகாட்டி மதிப்பை விட அதிகமாக இருக்கக் கூடாது.
இந்த விஷயத்தில் சார் பதிவாளர்கள் கவனமாக செயல்பட வேண்டு ம். அத்துடன், மேல்முறையீட்டு விசாரணையில், சம்பந்தப்பட்ட பத்திரதாரரை நேரில் அழைத்து விசாரிக்காமல், எந்த முடிவும் எடுக்கக்கூடாது. இந்த வழிகாட்டுதல்களை சார் பதிவாளர்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.