/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டு கொண்டாட்டம் ஏழு ரிசார்ட்களுக்கு நோட்டீஸ்
/
புத்தாண்டு கொண்டாட்டம் ஏழு ரிசார்ட்களுக்கு நோட்டீஸ்
புத்தாண்டு கொண்டாட்டம் ஏழு ரிசார்ட்களுக்கு நோட்டீஸ்
புத்தாண்டு கொண்டாட்டம் ஏழு ரிசார்ட்களுக்கு நோட்டீஸ்
ADDED : டிச 31, 2025 05:01 AM
கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ஆனைகட்டி பகுதியில் உள்ள ஏழு ரிசார்ட்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக, பொழுதுபோக்கு இடங்களில் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ரிசார்ட் போன்ற இடங்கள் பெரும்பாலும், அடுத்த ஐந்து நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவையில் அதிக ரிசார்ட் உள்ள பகுதியான ஆனைகட்டியில் உணவு பாதுகாப்புத்துறை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், ஏழு ரிசார்ட்களுக்கு சரியான சுகாதாரமின்மை, உணவு தயாரிப்பு, கையாள்வதில் விதிமுறைகள் பின்பற்றாமல் இருப்பது தொடர்பாக நோட்டீஸ் அளித்துள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''ஆனைகட்டி பகுதியில், 4 ரிசார்ட்களுக்கு நோட்டீஸ் கொடுத்து ள்ளோம். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம், உணவு கழிவு மேலாண்மை, உணவு கையாள் பவர்களுக்கு மருத்துவ சான்று உள்ளிட்ட விதிமுறைகள் இவர்களுக்கும் பொருந்தும். ஆய்வுகளில் குறைபாடுகள் கண்டறிந்து, சரிசெய்ய நோட்டீஸ் அளித்துள்ளோம். தொடர்ந்து ரிசார்ட் செயல்பாடுகள் கண்காணிக்கப்படு கின்றன,'' என்றார்.

