/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்திரைப் பணி முகாம் வியாபாரிகளுக்கு அறிவிப்பு
/
முத்திரைப் பணி முகாம் வியாபாரிகளுக்கு அறிவிப்பு
ADDED : மார் 17, 2026 05:57 AM
பொள்ளாச்சி: ஆனைமலையில், முத்திரைப்பணி முகாம் இன்று துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது, என, பொள்ளாச்சி முத்திரை ஆய்வாளர் நவநீதன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி முத்திரை ஆய்வாளர் நவநீதன் அறிக்கை வருமாறு: கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சார்பில், முத்திரைப்பணி முகாம் ஆனைமலையில் இன்று துவங்கி வரும், 23ம் தேதி நடக்கிறது.
வால்பாறையில் வரும், 24ம் தேதி முதல், ஏப். 7ம் தேதி வரை நடக்கிறது. முகாமில், ஆனைமலை, வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரிகள், வணிகர்கள் தங்களது எடைகள் மற்றும் அளவைகளை, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மேற்பார்வையாளர் என்ற முகவரிக்கும்; வால்பாறை ஸ்டேன்மோர் பிரிவு தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) என்ற முகவரியிலும் நேரில் கொண்டு வந்து முத்திரையிட்டு கொள்ளலாம்.
மேலும், முத்திரையிடாமல் எடைகள் மற்றும் அளவைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்து, குறைந்த பட்சம், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், வியாபாரிகள் முகாமினை பயன்படுத்தி முத்திரையிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப் பட்டுள்ளது.

