தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாக்காளர்களுக்கு நோட்டீஸ் 15,820 பேர் ஆவணம் சமர்ப்பிப்பு

 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் 15,820 பேர் ஆவணம் சமர்ப்பிப்பு

 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் 15,820 பேர் ஆவணம் சமர்ப்பிப்பு


ADDED : ஜன 04, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியின்போது, 6,50,590 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவங்களை பலரும் சரியாக நிரப்பாமல் கொடுத்திருக்கின்றனர்.

தேர்தல் பிரிவினர் ஆய்வு செய்தபோது, 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்ததா, இல்லையா என்கிற பகுதியையும், அவர்களது தந்தை உள்ளிட்ட உறவினர்களின் விபரங்களை பதிவு செய்யாமல் பலரும் கொடுத்திருந்தது தெரியவந்தது. இவ்வகையில், 1,10,984 வாக்காளர்களின் படிவங்கள் அடையாளம் காணப்பட்டது.வாக்காளராக தொடர, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. 29,701 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். 15,820 வாக்காளர்கள் ஆவணங்கள் கொடுத்திருக்கின்றனர். அவற்றை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு செய்து, பட்டியலில் மீண்டும் சேர்க்க இருக்கின்றனர்.

18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க, மாநகராட்சி பகுதியில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். தொகுதி வாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, எந்தெந்த இடங்களில் இருப்பு வைக்க வேண்டும் என்பதை இறுதி செய்து, அதற்கான பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், அந்தந்த தொகுதிக்குள் 'ஸ்ட்ராங் ரூம்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us