/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு கடன் திருப்பிச் செலுத்த 9 சதவீதம் சலுகை வட்டி அறிவிப்பு
/
கூட்டுறவு கடன் திருப்பிச் செலுத்த 9 சதவீதம் சலுகை வட்டி அறிவிப்பு
கூட்டுறவு கடன் திருப்பிச் செலுத்த 9 சதவீதம் சலுகை வட்டி அறிவிப்பு
கூட்டுறவு கடன் திருப்பிச் செலுத்த 9 சதவீதம் சலுகை வட்டி அறிவிப்பு
ADDED : பிப் 16, 2024 01:51 AM
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றவர்கள், நீண்ட காலமாக செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தால், 9 சதவீத சலுகை வட்டியில் திருப்பிச் செலுத்துவதற்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.அரசு அறிவித்துள்ள சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை பயன்படுத்தி, நிவாரணம் பெறலாம்.
சிறு வணிகர்கள், போக்குவரத்து, கைத்தறி, விசைத்தறி, தொழில், வாணிபம், வீடு கட்டுதல், வீட்டு அடமானம், 2021ல் தள்ளுபடி கிடைக்காத, தகுதியான சுய உதவிக்குழுவினர் மற்றும் கூட்டுப்பொறுப்புக்குழு கடன்கள் இதற்கு பொருந்தும்.
மேலும், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல், விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடம் இருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவற்றுக்கும் கடன் தீர்வுத் திட்டம் பொருந்தும்.
இதில், திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில், 25 சதவீத தொகையை, மார்ச், 12க்குள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். மீதமுள்ள, 75 சதவீத தொகையை, ஆறு மாதத்துக்குள், ஆறு தவணைக்குள் செலுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த, 15 ஆயிரத்து, 153 நபர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கங்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.