/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.டி.யூ. மாநாட்டில் நவம்பர் தினம் அனுசரிப்பு
/
சி.ஐ.டி.யூ. மாநாட்டில் நவம்பர் தினம் அனுசரிப்பு
ADDED : நவ 07, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் நவஇந்தியா அருகில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில், சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு நடந்து வருகிறது.
இந்த அரங்கத்தில், நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, சி.ஐ.டி.யூ.கொடி ஏற்றப்பட்டு, நவம்பர் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வரவேற்புக்குழுத் தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கொடியை ஏற்றி வைத்தார்.
அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென், அகில இந்தியத் தலைவர் ஹேமலதா, செயலாளர் கருமலையான், மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், துணை பொதுச்செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

