/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி காற்று காலம்; 'தகதகக்கும்' தக்காளி
/
இனி காற்று காலம்; 'தகதகக்கும்' தக்காளி
ADDED : ஜூலை 03, 2025 10:20 PM

தொண்டாமுத்தூர்; தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25 ஆயிரத்து 555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நீண்டகால பயிர்களான பாக்கு மற்றும் தென்னை, குறுகிய கால பயிரான சின்ன வெங்காயம், தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை, தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் பகுதியில், கடந்த 2 மாதங்களாக, தொடர் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்தது. தற்போது, கடந்த, 2 நாட்களாக, லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக, தக்காளி செடிகளில் காய்ப்பு குறைவாக இருந்தது. கடந்த வாரம், பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, தக்காளி வரத்து குறைந்து வருவதால், விலை உயரத்துவங்கியுள்ளது. நேற்று, பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 520 ரூபாய்க்கு விற்பனையானது.
இனி காற்று காலம் துவங்க உள்ளதால், இன்னும் இரண்டு வாரங்களில், தக்காளி விலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.