/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' ஆக்கிரமிப்புகளை எடுங்களேன்... 'லிஸ்ட்' கொடுத்தது போலீஸ்!
/
இனி, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' ஆக்கிரமிப்புகளை எடுங்களேன்... 'லிஸ்ட்' கொடுத்தது போலீஸ்!
இனி, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' ஆக்கிரமிப்புகளை எடுங்களேன்... 'லிஸ்ட்' கொடுத்தது போலீஸ்!
இனி, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' ஆக்கிரமிப்புகளை எடுங்களேன்... 'லிஸ்ட்' கொடுத்தது போலீஸ்!
ADDED : நவ 29, 2024 12:29 AM

கோவை; கோவை மாநகர பகுதியில் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரச் சொல்லி, மாநகர போலீஸ் தரப்பில், பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
கோவை மாநகர பகுதியில், நாளுக்கு நாள் ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. கடைகளுக்கு செல்வோர் வாகனங்களை ரோட்டில் நிறுத்துகின்றனர். பொதுமக்கள் நடுரோட்டில் நடந்து செல்கின்றனர். ரோடு குறுகலாகி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போதாக்குறைக்கு வர்த்தக நிறுவனத்தினர், ரோட்டில் விளம்பர பலகைகளையும் வைக்கின்றனர்.
நடைபாதை இல்லை
வர்த்தக பகுதிகள் அதிகமுள்ள வீதிகள் மற்றும் ரோடுகளில் பொதுமக்கள் செல்வதற்கு நடைபாதை கூட இல்லை. இவற்றை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி நகரமைப்பு துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை போக்குவரத்தை சீரமைக்க, போலீஸ் தரப்பில், ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக இருக்கின்றனர். அதனால், ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது; வாகனங்கள் செல்வதற்கு போதிய வசதியின்றி சாலை குறுகி வருகிறது. இவ்விஷயத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூடுதல் கவனம் செலுத்தி, நகரமைப்பு பிரிவினருக்கு, 'சுளுக்கு' எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

