/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
/
இனி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
இனி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
இனி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
ADDED : நவ 08, 2025 01:01 AM

கோவை: சுகாதாரத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பிரத்யேக முகாம், வாரந்தோறும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்துவந்தது.
இந்த வாரம் முதல் இம்முகாம், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனுக்கான சதவீதத்தை மருத்துவர்கள் குறிப்பிட்டு அளிக்கப்படும் சான்றிதழ் அடிப்படையில், அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுகள் இருந்தால் மட்டுமே, அரசின் சலுகைகளை பெற முடியும்.
இந்நிலையில், நேற்று நடந்த முகாமில் பங்கேற்ற சிலர், குறைபாடுகளின் சதவீதத்தை அதிகரித்து போட்டுத்தருமாறு வலியுறுத்தினார்கள்.
டாக்டர்கள், பரிசோதனை அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும்; குறைபாடுகளின் சதவீதத்தை உயர்த்த கோரி வரவேண்டாம் என அறிவுறுத்தி, திருப்பி அனுப்பினர்.
உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் பத்மராணி கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் முகாம் இனிமேல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நடக்கும்.
காலை, 10:00 முதல் 12 மணி வரை, ஒவ்வொரு புதன் அன்றும் கை, கால் குறைபாடு மற்றும் கண் பார்வை குறைபாடும், வெள்ளி அன்று மனநல குறைபாடு, நரம்பியல், கேட்கும் மற்றும் பேச்சு திறன் குறைபாடு பரிசோதனை செய்யப்படும்,'' என்றார்.

