/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.பி.டி.-ஆனைமலைஸ் ஏஜன்சிஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
/
என்.பி.டி.-ஆனைமலைஸ் ஏஜன்சிஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
என்.பி.டி.-ஆனைமலைஸ் ஏஜன்சிஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
என்.பி.டி.-ஆனைமலைஸ் ஏஜன்சிஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : ஆக 26, 2025 10:18 PM

பொள்ளாச்சி; கோவை, ஆனைமலைஸ் ஏஜன்சிஸ் நிறுவனம் மற்றும் என்.பி.டி. கல்லுாரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. என்.பி.டி. கல்லுாரி செயலாளர் சுப்ரமணியன், கோவை ஆனைமலைஸ் டொயோட்டா மனித உறவுகள் துறை துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக தொழில்துறை வருகை, சொற்பொழிவு மற்றும் ஆய்வு கட்டுரை, திட்டப்பணி, ஜி.பாடத்திட்ட மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆய்வுகள் மற்றும் ஆலோசனை, சிக்கல் தீர்க்கும் பிரச்னைகள் குறித்து பரிமாறிக் கொள்ள முடியும்.
குறிப்பாக, ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் வாயிலாக என்.பி.டி. கல்லுாரி ஆட்டோமொபைல் பொறியியல் மாணவர்களுக்கு, அவ்வப்போது சொற்பொழிவு மற்றும் ஆய்வு கட்டுரை வழங்கி, அவர்களை தொழில்முனைவோராக மாற்ற ஊக்குவிக்கப்படும்.
அந்நிறுவன ஊழியர்களுக்கு, என்.பி.டி. கல்லுாரி ஆசிரியர் வாயிலாக வகுப்பறை மற்றும் விளக்க அமர்வு வழங்கப்படும். மேலும், கள ஆய்வு மேற்கொள்ளவும், மேலாண்மை, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் துறை தொடர்பான ஆய்வுகளுக்கான உள்ளீடுகளை வழங்கவும் வாயப்பு அளிக்கும் என, தெரிவிக்கப்பட்டது.