/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
/
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : டிச 27, 2025 07:28 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துகவுண்டனூர் அரசு பள்ளியில், தனியார் கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாமிட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில், 24 முதல் 30ம் தேதி வரை நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடக்கிறது.
முகாமை ரத்தினம் கல்வி நிறுவனங்கள் முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம் துவக்கி வைத்தார். பி.டி.ஏ., தலைவர் திருநாவுக்கரசு பங்கேற்றார். கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம், துணை முதல்வர் சுரேஷ், திட்ட அலுவலர்கள் பங்கேற்று, திட்ட பணிகள் குறித்து பேசினர். மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முகாமில், தூய்மைப் பணிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவற்கான பணிகளில், மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

