/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : டிச 27, 2025 07:28 AM

வால்பாறை: தொடர் விடுமுறையால் வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் அதிகளவில் திரண்டுள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இதனால், ஆழியாறு பூங்கா, சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி பார்க்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறையில் பருவமழைக்கு பின் தற்போது குளுகுளு சீசன் நிலவுவதாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணியர் அதிகளவில் திரண்டுள்ளனர். இதனால், வால்பாறையில் உள்ள தங்குவிடுதிகள், ரிசார்ட்கள் 'ஹவுஸ்புல்' ஆகியுள்ளன.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் குப்பையை திறந்தவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.
சுற்றுலாபயணியர் கூறுகையில், 'தொடர் விடுமுறையால், குடும்பத்துடன் வால்பாறையை கண்டு ரசிக்க வந்துள்ளோம். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை. 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் மட்டும் வசூலிக்கின்றனர்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தகவல் மையம் அமைத்து, 'கார் பார்க்கிங்' வசதி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.

