/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய வட்டத்தின் நிகழ்வில் கவிஞர்களின் நுால்கள் வெளியீடு
/
இலக்கிய வட்டத்தின் நிகழ்வில் கவிஞர்களின் நுால்கள் வெளியீடு
இலக்கிய வட்டத்தின் நிகழ்வில் கவிஞர்களின் நுால்கள் வெளியீடு
இலக்கிய வட்டத்தின் நிகழ்வில் கவிஞர்களின் நுால்கள் வெளியீடு
ADDED : டிச 27, 2025 07:28 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஒவ்வொரு மாதமும் இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதில், இம்மாத நிகழ்வு, நுால்கள் வெளியீடாகவும், படைப்பு அனுபவ உரை வழங்கும் விழாவாகவும் நடந்தது.
இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். கவிஞர் சோலைமாயவன் வரவேற்றார்.
மலையாள எழுத்தாளர் சண்முகதாஸ் எழுதி, முனைவர் பாத்திமா மொழி பெயர்த்த கடலாழங்கள் நுாலினை, எழுத்தாளர் சிவக்குமார் வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்.
நுாலினை, மலையாள எழுத்தாளர் பிரேம்தாஸ் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் பாத்திமா, சண்முகதாஸ் ஏற்புரை வழங்கினர்.
கவிஞர் ஆனந்தபிரபு எழுதிய நான்மாடக்கூடல் நுாலினை, கவிஞர் சிவக்குமார் வெளியிட, அஸ்வின் பிரபு பெற்றுக்கொண்டார். நுாலினை கவிஞர் சுடர்விழி அறிமுகப்படுத்தினார்.
விழாவில், தாங்கள் வாசித்த நுால்களின் சிறப்பினை பகிர்ந்து கொள்ளும் ரசனைப்பிரிவு நிகழ்வில், கவிஞர் காளிமுத்து தலைமை வகித்தார். கவிஞர்கள் கார்த்திகா, ஜனனி, யாழினி, தன்யா, ஹரிப்பிரியா ஆகியோர் ரசனை அனுபவங்களை பகிர்ந்தனர்.
எழுத்தாளர் மூர்த்தி எழுதிய மோனோலாக் கதைகள் நுாலினை, எழுத்தாளர் நிழலி அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் மூர்த்தி படைப்பு அனுபவ உரையாற்றினார். தொடர்ந்து, எழுத்தாளர்கள் பங்கேற்ற கவியரங்கம், படித்ததில் பிடித்தது என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நுால் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இளம் வாசகர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கவிஞர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

