/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
/
இந்துஸ்தான் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
இந்துஸ்தான் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
இந்துஸ்தான் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
ADDED : பிப் 08, 2024 06:43 AM
கோவை : இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், நாட்டு நலப்பணித்திட்டம் முகாம், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் நடந்தது.
மாணவர்கள், இப்பகுதியில் உள்ள கோவில் வளாகம், அரசு பள்ளி வளாகம் மற்றும் சமுதாய நல கூடம் கட்டடங்களில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்; கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை, கிராமப்புற பெண்களுக்கு கணினி பயிற்சி, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
முகாம் நிறைவு விழாவில், கல்லுாரி தாளாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, தலைமை கல்லுாரி முதல்வர் கோகிலவாணி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் அருண்குமார், கட்டடவியல் துறை தலைவர் பிரபு, முகாமில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பேசினர்.