/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம்
/
மாநகராட்சி பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம்
ADDED : செப் 27, 2025 01:09 AM

கோவை; வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 2025-26ம் கல்வியாண்டுக்கான நாட்டு நலப்பணித் திட்டத்தில் (என்.எஸ்.எஸ்.) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.
'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெறும் இம்முகாம் அக்., 2 வரை நடைபெற உள்ளது.துவக்க நிகழ்வில், ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் இலவச பல் சிகிச்சை முகாம் நடத்தினர். மாணவர்களுக்கு பல் பரிசோ தனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியை திட்ட அலுவலர் தமிழ்வாணி மற்றும் துணை திட்ட அலுவலர் ஹரிஹரன் இணைந்து நடத்தினர்.
திட்ட அலுவலர் தமிழ்வாணி கூறுகையில், ''இந்தாண்டு பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் 25 மாணவர்கள், பிளஸ் 2 அல்லது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 3 பேர், 2 ஆசிரியர்கள் என 30 பேர், இப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மாணவர்களுக்கான உணவு வசதியுடன் முகாம் காலை முதல் மாலை வரை நடைபெறும். இம்முகாம், மாணவர்களின் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கிறது,'' என்றார்.