/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.எஸ்.எஸ். முகாம்; மாணவர்கள் துாய்மை பணி
/
என்.எஸ்.எஸ். முகாம்; மாணவர்கள் துாய்மை பணி
ADDED : செப் 30, 2025 12:32 AM

- நிருபர் குழு -
ஆனைமலை அருகே, கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஷாஜகான் வரவேற்றார்.
நாட்டு நலப்பணித்திட்டங்கள் குறித்தும், டிஜிட்டல் கல்வி, அறிவியலில் இளைஞர்களின் பங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் விழாவை ஒருங்கிணைத்தார். நாட்டுநலப்பணித்திட்ட உதவி அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. வடசித்தூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் முகாம் துவங்கியது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் தேவராசு தலைமையேற்றார்.
எஸ்.எம்.சி., குழுவினர், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
ஒரு வார கால முகாமில், உடல் நலம் சார்ந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் மற்றும் விதை நடவு செய்தல், சுற்றுப்புறத் தூய்மை செயல்பாடுகள், திடக்கழிவு மேலாண்மை, மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மேலும், போதை பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு, சட்டக் கல்வி விழிப்புணர்வு, பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சிகள் நடக்கிறது.
* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், வடபுதூர் ஊராட்சியில், நேற்று முதல் அக்டோபர் 3 வரை, 7 நாட்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடக்கிறது.
முகாமுக்கு, பி.டி.ஏ., தலைவர் கனகராஜ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மணிமாலா ஆகியோர் தலைமை வகித்தனர். டிஜிட் டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி வளாகம் தூய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, டெங்கு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
உடுமலை புங்கமுத்தூர் காந்தி கலா நிலையம், பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம், தீபாலப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய முகாமை சமூக ஆர்வலர் அர்ச்சுனன் துவக்கி வைத்தார்.
பள்ளி அருகிலும், இதர இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, துாய்மை பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்.
பின்னர் திருமூர்த்திமலை பரஞ்ஜோதி இன்ஸ்டிடியூட் மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினர். ஏற்பாடுகளைத் திட்ட அலுவலர் அசோக்குமார் மற்றும் ஆசிரியர் நரசிம்மன் செய்தனர்.
வால்பாறை வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட துவக்க விழா, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மாணவர்கள் சுத்தம் செய்தனர். அதன்பின் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வரும், 4ம் தேதி வரை நடைபெறும் முகாமில் இயற்கை பாதுகாப்பு, சுகாதாரம், சட்ட விழிப்புணர்வு, போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு, பாட்டுபோட்டி, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் ராகவன் மற்றும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.