/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலாண்டு விடுமுறையில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
/
காலாண்டு விடுமுறையில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
ADDED : செப் 27, 2025 12:46 AM
கோவை; அரசு பள்ளி மாணவர்கள் இடையே தன்னார்வ சேவையை ஊக்குவிக்கவும், தனித்திறன்களை வளர்த்து, சமூக பங்களிப்பை மேம்படுத்தவும், காலாண்டு விடுமுறையில், நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. நேற்று துவங்கிய இம்முகாம், ஏழு நாட்கள் நடக்கும்.
ஒவ்வொரு முகாமிலும் 25 மாணவர்கள், அவர்களை வழிநடத்த 2 ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட மூன்று சமூக பிரதிநிதிகள் என, 30 பேர் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, முகாமில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோரிடம் இருந்தும் மறுப்பின்மைச் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வையும், குழுவாக இணைந்து செயல்படும் திறனையும் வளர்த்துக் கொள்வார்கள்' என திட்ட ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர்.