ADDED : டிச 11, 2025 05:02 AM
அ நிறம் | அளவு
கோவை: கடந்த பத்து மாதங்களாக, என்.டி.சி.,மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தப்பட்டதால், அவர்களது குடும்பத்தினர் கடும் சிரமக்குள்ளாகியுள்ளனர் என்று, மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், பாரதிய மஸ்துார் சங்க நிர்வாகிகள் கூறினர்.
இந்த சந்திப்பு குறித்து கூறிய பாரதிய மஸ்துார் சங்க நிர்வாகிகள், 'தேசிய பஞ்சாலைகளை மீண்டும் திறப்பது ஒரு கொள்கை பிரச்னை. அதை பிரதமர் அலுவலகம் முடிவு செய்யும். ஆனாலும் பிரதமர் மோடியை சந்தித்து என்.டி.சி.,மில்., கொள்கையை மறுபரிசீலனை செய்ய கோருவதாக, அமைச்சர் உறுதி அளித்தார்' என்றனர்.
