/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமூர்த்திமலை கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
/
திருமூர்த்திமலை கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED : மார் 14, 2024 11:59 PM

உடுமலை:உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. ரூ.4.80 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
மழை வெள்ளம் காரணமாக, ஜன., 10ம் தேதி, உண்டியல் எண்ணப்பட்டது. தொடர்ந்து, மகா சிவராத்திரி விழா நடந்த நிலையில், நேற்று உண்டியல் எண்ணும் பணி பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
மொத்தமுள்ள, 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தர்கள், 4 லட்சத்து, 80 ஆயிரத்து, 206 ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
கோசாலை உண்டியலில், 1,158 ரூபாய் காணிக்கை இருந்தது. உண்டியல் எண்ணும் பணியின் போது, அறங்காவலர் குழுவினர், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

