/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
ADDED : ஜூன் 11, 2025 09:46 PM
கோவை; கோவையில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வட்டார வள மையங்களில் பயிற்சி வகுப்புகள், நடைபெற்று வருகின்றன.
மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், கோவை நகரம், சூலூர், எஸ்.எஸ்.குளம் உள்பட 15 ஒன்றிய வட்டாரங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய இந்த பயிற்சியில், 1,200க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
பயிற்சி வகுப்பில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக, செயல் வழி கல்வி முறைகள், தலைப்புகளுக்கேற்ப பாடங்களை கற்பிப்பது, மாணவர்களின் கல்வித்தர மதிப்பீட்டு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. சுழற்சி முறையில் 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.