/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு
/
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 16, 2025 09:47 PM
சூலுார்; ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு சுல்தான்பேட்டையில் நடந்தது
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான, எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு சுல்தான்பேட்டை வட்டார வள மையத்தில் நடந்தது. துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட, 120 ஆசிரியர்களுக்கு, மூன்று பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் பயிற்சியை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி கற்க வைப்பதன் அவசியம் குறித்தும், பயிற்சியின் நோக்கம் குறித்தும் விளக்கினார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். மாணவர்களின் பேச்சு உரிமை, கேள்வி கேட்கும் உரிமை, கல்வி உரிமை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.