/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் ரூபாய் மோசடி; குவைத்தில் இருந்து கோவை வந்யத நர்ஸ் புகார்

ADDED : மே 20, 2025 06:50 AM

கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, குவைத்தில் இருந்து வந்த நர்ஸ், கோவை கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், காரமடை, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அனிதா, 43. குவைத்தில் உள்ள மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிகிறார். தற்போது குவைத்தில் இருந்து திரும்பியுள்ள இவர், 'புனேயில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக, 10 லட்சம் ரூபாயை கோவை என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த கமலேஷ் என்பவர், ஏழு ஆண்டுக்கு முன் பெற்றார்; அதை மீட்டுத்தர வேண்டும்' என, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார். கமலேஷ் பேசிய ஆடியோ, வங்கி பரிவர்த்தனைக்கான ஆதாரங்களையும் இணைத்திருக்கிறார்.
அனிதா கூறுகையில், ''கமலேஷ்மற்றும் அவரது மனைவிபேசியதில் ஏற்பட்ட நம்பிக்கை அடிப்படையில், எனது மாமியார் மாரியம்மாள் வங்கி கணக்கில் இருந்து, கமலேசின் வங்கி கணக்கிற்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.
அவர் வேலையும் வாங்கித்தரவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷனுக்கும், எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., அலுவலகங்களுக்கும் ஏழாண்டுகளாக நடையாய் நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. கலெக்டர்தான் தீர்வு காண வேண்டும்,'' என்றார்.