/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவிலியர் பணியிடம் சான்றிதழ் சரிபார்ப்பு
/
செவிலியர் பணியிடம் சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : நவ 12, 2024 05:56 AM

கோவை ; கோவை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவில், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 54 நகர சுகாதார செவிலியர்கள் மற்றும், 10 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை ஒப்பந்த முறையில் தற்காலிகமாக நிரப்ப மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
இதற்கான நேர்காணல், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது.
செவிலியர் பணியிடத்துக்கு, 36 பேர் விண்ணப்பித்திருந்தனர்; அவர்களில், 33 பேர் நேர்காணலுக்கு வந்தனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.நகர சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு, 64 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
அனைவரும் நேர்காணலுக்கு வந்ததை தொடர்ந்து, இரு குழுக்களாக அதிகாரிகள் அமர்ந்து, சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

