/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோயாளிகளிடம் கனிவுடன் பேச நர்சுகளுக்கு அறிவுரை
/
நோயாளிகளிடம் கனிவுடன் பேச நர்சுகளுக்கு அறிவுரை
ADDED : ஜூன் 05, 2025 01:23 AM
கோவை; கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் நாள் ஒன்றுக்கு, 9,000 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். பிற மருத்துவமனைகளை போன்று அல்லாமல், அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு, தொடர்ந்து வேலைப்பளு இருக்கும். இவர்களின், குறைகளை கேட்கவும், உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவும், அவ்வப்போது கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
நேற்று நடந்த கூட்டத்தில், தலைமை செவிலியர்கள் பங்கேற்று, பணிநேரம், பதிவேடு பராமரிப்பு, வார இறுதிநாட்களில் விடுமுறை எடுத்தல் குறித்து அறிவுறுத்தல் வழங்கின. செவிலியர்களின் குறைகளை கேட்டு, அதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நோயாளிகளுடன் கனிவுடன் பேசவும், சில நோயாளிகளை எதிர்கொள்வது சிரமம் என்றாலும் பொறுமையை கையாள வேண்டும் எனவும், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.