/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி நர்ஸ்கள் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி நர்ஸ்கள் போராட்டம்
ADDED : ஜன 31, 2024 11:53 PM

கோவை : கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், நடந்த கூட்டத்தில், தி.மு.க., அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பணிநிரந்தரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, நர்ஸ்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 27ம் தேதி முதல், இன்று வரை, தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், துணை செயலாளர் ஆகியோருக்கு, கோரிக்கை அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடந்தது. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நர்ஸ்கள், கோரிக்கைகள் அடங்கிய கறுப்பு அட்டை அணிந்து, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், 180 நர்ஸ்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.